Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அர்ஜூன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி


Murugan| Last Modified செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (12:37 IST)
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி சுப்புரத்தினம் நேற்று இரவு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
அர்ஜீன் சம்பத்திற்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் ஓம்கார் பாலாஜி(22). இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். அதேபோல், அவரின் இளைய மகன் பள்ளியில் படித்து வருகிறார். சுப்புரத்தினம் கோவை குறிச்சி பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில், நேற்று இரவு சுப்புரத்தினத்திற்கும், அவரின் மூத்த மகன் பாலாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சுப்புரத்தினம் 17 தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 
 
இதையடுத்து அவர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :