திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (12:01 IST)

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு..

காவி உடை அணிந்து வெளியான திருவள்ளுவரின் புகைப்படம் குறித்து பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்தார்.

திருவள்ளுவர் காவி அங்கி, நெற்றியில் திருநீர் ஆகியவற்றுடன் இருப்பது போலான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளிவந்ததை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா “சனாதான இந்து தர்மத்தின் படி உருவானதே திருவள்ளுவம்” என கூறினார். இதனை தொடர்ந்து, திருவள்ளுவரை இந்துத்துவாவுக்குள் அடைக்கப்பார்க்கிறார்கள்” என முக ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமரியாதைபடுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்தார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத். மேலும் திருவள்ளுவர் சிலைக்கு ருட்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது.

திருவள்ளுவருக்கு மத அடையாளம் பூசப்படுவதாக எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து தற்போது திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் காவி உடை அணிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.