வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (21:21 IST)

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு! – ஓபிஎஸ் பேட்டி!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு 15 நாட்களுக்கு தெரிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் பதவிக் காலங்கள் முடிந்த பின்னும் இன்னமும் தேர்தல் நடத்தப்படாமலே இருந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் வழக்குகளை தள்ளுபடி செய்து தேர்தல் நடத்துவதற்கான அனுமதியை அளித்தது.

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல்களால் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நவம்பர் அல்லது டிசம்பரி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 15 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.