புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2020 (20:46 IST)

தொல்லியல் பட்டப்படிப்பில் தமிழ் புறக்கணிப்பு: கொதித்து எழுந்த எம்பி!

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணித்து வருவதாகவும் மத்திய அரசு தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் சற்று முன் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையை மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இந்தப் படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தொல்லியல் பட்டய படிப்புக்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால் செம்மொழியான தமிழ் மொழிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசுக்கு மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெங்கடேசன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில் செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை இது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்