செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (11:36 IST)

கிரவுண்டில் இறங்காமல் கிரிக்கெட் விளையாடுகிறார் முதல்வர்: அண்ணாமலை

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கிரவுண்டில் இறங்காமல் கிரிக்கெட் விளையாடுகிறார் என தேர்தல் பிரச்சாரம் நேரடியாக செய்யாமல் காணொளி மூலம் பிரச்சாரம் செய்வதை அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில்  கோவை பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் ’கோவையில் மாற்றத்திற்காக பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்றும் உங்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்பவர்கள் நீங்கள் ஓட்டு போட்ட பின் அவர்கள் காலில் விழ வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார். 
 
20 ஆண்டுகளுக்கு கோவை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்ததோ, அதேபோன்ற கோவையை உருவாக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். 
மேலும் முதல்வர் வீட்டில் அமர்ந்து கொண்டே காணொளி மூலம் வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறார். கிரவுண்டில் இரங்காமல் அவர் கிரிக்கெட் விளையாடலாம் என்று நினைக்கிறார். 2.64 கோடி பேர் ஓட்டு போடும் தேர்தலில் அவர் மக்களை நேரடியாக சந்திக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.