புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 ஜூன் 2022 (19:59 IST)

முன்னாள் அதிமுக அமைச்சர் இல்ல திருமண விழாவில் அண்ணாமலை!

annamalai
முன்னாள் அதிமுக அமைச்சர் இல்ல திருமண விழாவில் அண்ணாமலை!
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் இல்லத் திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன
 
கரூர் மாவட்ட மாவட்ட செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டு இல்ல திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது 
 
இந்த திருமணத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருமணத்தில் கலந்து கொண்டார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
கரூர் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான அண்ணன் விஜய பாஸ்கர் அவர்களின் இல்லத் திருமண விழாவில், கலந்துகொண்டு மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறையருள் வேண்டி வாழ்த்தி மகிழ்ந்தேன்.