திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 1 ஜூன் 2022 (21:10 IST)

திமுக அரசுக்கு முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள்: அண்ணாமலை

Annamalai
தங்களது ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவோர்களின் குரல்வளையை நசுக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டி வரும் இந்த அறிவாலயம்  அரசு, மக்களை மறந்து வெகு நாட்கள் ஆகிறது. 
 
வாராவாரம் இப்படிப்பட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடப்பது தான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை.
 
திமுக நிர்வாகியிடம் இழந்த 4000 சதுரடி நிலத்தை மீட்கப் போராடும் இந்த குடும்பம் எடுத்த முடிவு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிப்பு. 
 
விளம்பரம் மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இந்த திமுக அரசுக்கு முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள்