செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (13:40 IST)

பலநூறு கோடி பிசினஸ்க்கு தடையாக இருந்தாரா ஆம்ஸ்ட்ராங்? கொலைக்கு திடுக்கிடும் பின்னணி

பலநூறு கோடி பிசினஸ்க்கு தடையாக இருந்தாரா ஆம்ஸ்ட்ராங்? என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
 
சென்னையில் பழைய பொருட்கள் பிசினஸை கைப்பற்றுவதில், ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்தார் என்றும், ஸ்கிராப் பிசினஸ் கட்டப்பஞ்சாயத்துகளில் சம்போ செந்திலுடன் ஆம்ஸ்ட்ராங் தகராறு என தகவல் வெளியாகியுள்ளது. எனவே தொழில் போட்டி உள்பட பல கோணங்களில் விசாரணை விரிவடைந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
 
சென்னை புறநகர் பகுதிகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு நடைபெறும் ஸ்கிராப் பிசினஸ் தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வரும் நிலையில் தலைமறைவாக இருந்தாலும், ஸ்கிராப் பிசினஸில் சம்போ செந்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் மேலும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்போ செந்தில் வெளிநாட்டிற்கு போலி பாஸ்போர்ட் மூலம் தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் சம்போ செந்திலின் மனைவியும் வெளி நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva