ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (11:18 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. வழக்கறிஞரை பிடித்து விசாரணை செய்யும் போலீசார்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, பிரபாகரன் என்ற வழக்கறிஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வழக்கறிஞர் பிரபாகரன், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயபாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது..
 
மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளருமான தென்னரசுவின் அண்ணனான பாம் சரவணனை தேடி வரும் போலீசார், ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் பாம் சரவணன் பங்கேற்கலாம் என்று போலீசார் எதிர்பார்த்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை
 
ஆம்ஸ்ட்ராங்க் உடலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த உயிரிழந்த பாம் சரவணனின் அண்ணன் உயிரிழந்த போதும் அவர் வரவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவு பிரிவு எச்சரிக்கையை தொடர்ந்து பாம் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தான் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயபாலின் மகன் வழக்கறிஞர் பிரபாகரன் என்ற வழக்கறிஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva