புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 16 மே 2020 (15:22 IST)

மணலி தொழிற்சாலையில் வாயுக்கசிவு – மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

சென்னையை அடுத்துள்ள மணலியில் உள்ள யூரியா தொழிற்சாலையில் இருந்து வாயு கசிந்ததால் மக்களுக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலியில் பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் (எம்.எஃப்.எல்) எனும் யூரியா தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு நேற்று முன் தினம் இரவு அம்மோனியா கசிந்ததால் அருகில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் அரிப்பு தோல் அரிப்பு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் நேற்று முன் தினம் இரவு தூங்க முடியாமல் தவித்துள்ளனர். குறைந்த அளவிலான வாயுக்கசிவு என்பதால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் தற்போது வரை அந்த பகுதியில் மோசமான துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.