திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 4 அக்டோபர் 2017 (08:59 IST)

ஜெயா டிவிக்கு எதிராக வருகிறது அம்மா டிவி: எடப்பாடியின் அடுத்த அதிரடி!

ஜெயா டிவிக்கு எதிராக வருகிறது அம்மா டிவி: எடப்பாடியின் அடுத்த அதிரடி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக இயங்கி வந்தது. ஜெயலலிதாவின் உரைகள், திட்டங்கள் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது.


 
 
ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை எடப்பாடியும், ஓபிஎஸ்-ம் சேர்ந்து வழி நடத்தி வருவதால் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அதிமுகவுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிராக செய்திகளை வெளியிட்டு வருகிறது.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் உரைகளை, நிகழ்ச்சிகளை முழுமையாக திரும்ப திரும்ப ஒளிபரப்ப, தங்களை புரொமோட் செய்ய ஒரு தொலைக்காட்சி சேனல் வேண்டும் என திட்டமிட்டுள்ளது ஆளும் தரப்பு. தனது நெருங்கிய வட்டாரங்களை இது தொடர்பாக பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.


 
 
ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்ட போது தங்களுக்கு என ஒரு டிவி சேனல் ஆரம்பிக்க திட்டமிட்டனர். மாஃபா பாண்டியராஜன் மூலம் அந்த பணிகள் வேகமெடுத்தன. அம்மா டிவி என்ற பெயரில் அதனை தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் இரு அணிகளும்  இணைந்ததால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது எடப்பாடி தரப்பு தங்களுக்கு தனியாக டிவி சேனல் வேண்டும் என கருதுவதால், ஓபிஎஸ் அணியினர் வைத்திருந்த அம்மா டிவி சேனல் திட்டத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு ஆதரவாக இருப்பதால் இதற்கான அனுமதியை பெற்றுவிடலாம் என தீவிரமாக உள்ளனர். விரவில் அம்மா டிவி சேனல் உதயமாக உள்ளது என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.