Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினிகாந்த அரசியலுக்கு வந்தால்? - லதா பரபரப்பு கருத்து


Murugan| Last Modified செவ்வாய், 3 அக்டோபர் 2017 (18:00 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்கள் ஏற்படும் என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 

 
சமீபகாலமாக நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என்கிற கருத்து வலுத்து வருகிறது. இதில், தான் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறேன் என கமல்ஹாசன் வெளிப்படையாக கூறிவிட்டார். ஆனால், ரஜினிகாந்த் அதுபற்றி எதுவும் அறிவிக்கவில்லை.
 
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய லதா ரஜினிகாந்த் “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி விரைவில் அறிவிப்பார். அவர் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்கள் ஏற்படும். அவர் மனதில் பட்டதை செய்யும் பழக்கமுடையவர். ஆனால், அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது அவருக்குதான் தெரியும். அவரிடம் நூற்றுக்கணக்கான திட்டங்கள் இருக்கிறது” என அவர் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :