1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (10:36 IST)

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க தினகரன் சதி - நமது அம்மா செய்தி

சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க டிடிவி தினகரன் சதி செய்து வருகிறார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா செய்தி வெளியிட்டுள்ளது.

 
தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 45க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். 
 
இறுதியாக, கணக்கில் வராத பணமாக ரூ.4 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர். அதேபோல், வெளிநாட்டில் பணம் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியுது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கிறிஸ்டி நிறுவனம் வங்கியில் ரூ.245 கோடி டெபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே சத்துணவு துறையில் ஊழல் நடந்தது எனக் கூறினார். இது குறித்து அதிமுகவின் நாளிதழான ‘நமது அம்மா’ வெளியிட்டுள்ள செய்தியில் “ டிடிவி தினகரன் கூறியது போல் நடந்திருந்தாலும், அந்த ஊழல் பணம் அனைத்தும் சசிகலாவிடம்தானே சென்றிருக்கும். எனவே, தினகரன் பேசுவதை பார்க்கும் போது, சசிகலாவை நிரந்தரமாக சிறையில் வைக்க அவர் சதி செய்வது போலவே தெரிகிறது” என செய்தி வெளியிட்டுள்ளது.