புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (09:07 IST)

தேமுதிகவுடன் கூட்டணி உறுதி செய்யப்படலாம் - தினகரன்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிகவிற்கு அவர்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில், கூட்டணியில் இருந்து விலகியது.

இந்நிலையில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனித்துப்போட்டியிட்டால் அதிகம் செலவாகும் என்றும் கட்சியின் பொருளாதாரத்தைக் கருத்திக் கொண்டுதான் கூட்டணிக்கு முயற்சி செய்வதால் தேமுதிக தலைமை பேசியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், தேமுதிக அமமுவுடன் கூட்டணி குறித்துப் பேசிவருவதாகக் கூறப்பட்ட நிலையில், இதை டிடிவி தினகரன் உறுதி செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தேமுதிகவுடன் அமமுக கூட்டணி குறித்துப் பேசிவருவது உண்மைதான். இருகட்சிகளும் எப்போதுவேண்டுமானாலும் கூட்டணி அமையலாம் எனக் கூறியுள்ளார்.