செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (22:10 IST)

கரூர் மாவட்ட அதிமுக வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி.

admk
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதால் கரூர் மாவட்ட அதிமுக வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி. 
 
 
ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

 
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும்,  அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது என்றும், உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

 
இந்த நீதிமன்ற தீர்ப்பால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
 

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் வகையில் இடைக்கால பொதுச்செயலாளர் திரு கே.எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒற்றை தலைமையிலான அதிமுக பலம் பெறவும், தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனை படி மாவட்ட அவைத்தலைவர் எஸ்.திருவிகா தலைமையில் கரூர் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கு முன்னதாக அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை ஊர்வலம் சென்று கழகத்தின் காவலர் எடப்பாடியார் வாழ்க என கோஷங்கள் எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
 
இந்நிகழ்ச்சியில்  இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாவட்ட துணை செயலாளர் அலம் தங்கராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கே.எல்.ஆர்.தங்கவேல், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை  செயலாளர் கமலகண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் தானேஷ் (எ) முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், கரூர் சேர்மன் பாலமுருகன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் குணா, ஒன்றிய செயலாளர்கள் மார்கண்டேயன், மதுசுதன், எம்.ஆர்.கே.செல்வகுமார், கலையரசன், ஈஸ்வரமுர்த்தி,  கடவூர்  ரமேஷ், வி.சி.கே.பாலகிருஷ்ணன், பேரூராட்சி செயலாளர்கள் சி.பி.பழனிசாமி, அரவிந்த், நகர செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன், பகுதி செயலாளர்கள் விசிகே ஜெயராஜ், சேரன் பழனிச்சாமி, சக்திவேல், அண்ணமார் தங்கவேல், ஆண்டாள் தினேஷ் குமார், சுரேஷ் குமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, கிளை, வார்டு  கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.