1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (17:51 IST)

71 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் கடுங்குளிர்! விவசாய போராட்டம் என்ன ஆகும்?

71 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் கடுங்குளிர்! விவசாய போராட்டம் என்ன ஆகும்?
71 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் வரலாறு காணாத கடும் குளிர் ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லியில் கடந்த 1949ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டு நவம்பரில் தான் கடுமையான குளிர் இருந்ததாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் ஆக காணப்பட்டது என்றும் இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது
 
டெல்லியின் ஒவ்வொரு வருடமும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் இருக்கும் என்றாலும் இந்த அளவுக்கு குறைவான வெப்பநிலை இருந்தது இல்லை என்றும் 71 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் டெல்லியில் கடுமையான குளிர் இருப்பதாகவும் வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது 
 
டெல்லியில் தற்போது இரவு பகலாக விவசாயிகள் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்த கடும் குளிரால் போராட்டம் பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்