1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2020 (12:53 IST)

விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது: மன்கீபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!

இந்திய பிரதமர் மோடி வானொலியில் ஒவ்வொரு மாதமும் மான்கீபாத் என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார் என்பதும் அவற்றுக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்பதும் தெரிந்ததே  
அந்தவகையில் இன்று அவர் மான்கிபாத் நிகழ்ச்சியில் பேச உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறார்
 
தற்போது விவசாயிகள் போராட்டம் உச்சகட்டமாக நடந்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு பிரதமர் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். விழிப்புணர்வே அதிகாரம் என்பதை விவசாயிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்  
 
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கி உள்ளதாகவும் வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய கதவுகளைத் திறந்து உள்ளதாகவும் பிரதமர் மோடி மான்கிபாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்
 
மேலும் கடந்த சில ஆண்டுகளில் பல சிலைகள் கலைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்திய மரபு சின்னங்களும் அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்