திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (11:21 IST)

கருணாநிதி பட திறப்பு விழா; ரஜினிக்கு அழைப்பு! – அதிமுக வர மறுப்பு!

தமிழக சட்டபேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுகவினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு 5 நாட்கள் சுற்றுபயணமாக வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பட திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுக சட்டப்பேரவை வரலாற்றை திரிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.