காதலில் இருந்த போது எடுத்த முதல் புகைப்படத்தை வெளியிட்ட சினேகன் மனைவி!
மக்கள் நீதி மய்ய பிரமுகர் மற்றும் சினிமா பாடலாசிரியர் சிநேகனின் திருமணம் சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் முன்னிலையில் நடந்தது.
தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் கவிஞர் சினேகனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது. அந்த செய்திகளை உண்மையாக்கும் விதமாக இவர்களது திருமணம் கடந்த 29 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணத்துக்குப் பின்னர் கன்னிகா சினேகனை காதலித்த போது எடுத்த தங்களுடைய முதல் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.