வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (10:51 IST)

பாஜகவை கழட்டிவிடதான் வெயிட்டிங்! அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு!

பாஜகவை பிரிந்து செல்ல தக்க நேரம் பார்த்து வருவதாக அதிமுக அமைச்சர் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மக்களைவை தேர்தலில் கூட்டணி அமைத்த பாஜக – அதிமுக தொடர்ந்து இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் முதற்கொண்டு தங்களது கூட்டணியை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றுஇல் பேசிய அதிமுக அமைச்சர் பாஸ்கரன் ”தமிழக அமைச்சரவையிலேயே பலர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜகவை விட்டு பிரிய நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என பேசியுள்ளார்.

அமைச்சரது இந்த பேச்சு அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திமுக –காங்கிரஸ் இடையே கருத்து மோதல் நிகழ்ந்தது போல அமைச்சரின் இந்த பேச்சால் அதிமுக – பாஜக இடையே மோதல் நிகழலாம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.