1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (18:36 IST)

அவசர அவசரமாய் புது சட்டம்: குதுகலத்தில் கூட்டணி கட்சிகள்; திகைப்பில் எதிர்கட்சிகள்!

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல்  தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. 
 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக,தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்  விருப்ப மனு விநியோகத்தை துவங்கியுள்ளன.    
 
இந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என அதிமுக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மொத்தமுள்ள 15 மேயர் பதவிகளில் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்தபட்சம் 2 மேயர் சீட்டுகளை ஆவது அதிமுக கொடுக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட் கொடுத்தால் அதிமுக சிக்கலில் சிக்கிவிடும்.  ஒன்று கட்சிக்குள் அதிருப்தி ஏற்படும் அல்லது தேர்தலில் தோல்விபெற நேரிடும். 
 
மறைமுக தேர்தல் என்றால் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அவர்களை வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார். இவ்வாரு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதால் ஆளும் கட்சிக்கு என்ன லாபம் என்றால் மேயர் பதவி முழுக்க கட்சியின் கட்டுபாட்டிற்குள் சென்றுவிடும் என்பதுதான். 
 
எனவே மறைமுக தேர்தலை கொண்டு வந்து தப்பித்துக்கொள்ளாம் என கணக்கு போட்டு அதிமுக இது குறித்து பேசியிருக்கலாம் என கூறப்பட்டது.  இதற் ஏற்ப தற்போது மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்ற அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
1986 முதல் 2001 ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், மறைமுக தேர்தல் முறையும் அமலில் இருந்தது. மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் மீண்டும் நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது என்பது கூடுதல் தகவல்.