வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 20 நவம்பர் 2019 (17:20 IST)

அதிமுக ப்ளான் போட்ட மறைமுக தேர்தலால் யாருக்கு என்ன லாபம்?

மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுக தேர்தலாக நடத்துவது என்றால் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக,தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்  விருப்ப மனு விநியோகத்தை துவங்கியுள்ளன.   
 
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிமுகவிடம் இருந்து 25% இடங்களை கேட்க முடிவு செய்துள்ளதாம். குறிப்பாக கோவை, திருப்பூர், நாகர்கோவில் மாநகராட்சியையும் பாஜ குறிவைத்து காய்நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல தேமுதிகவும் 3 இடங்களை கேட்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.  
 
இந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என அதிமுக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மொத்தமுள்ள 15 மேயர் பதவிகளில் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்தபட்சம் 2 மேயர் சீட்டுகளை ஆவது அதிமுக கொடுக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட் கொடுத்தால் அதிமுக சிக்கலில் சிக்கிவிடும்.  
 
ஒன்று கட்சிக்குள் அதிருப்தி ஏற்படும் அல்லது தேர்தலில் தோல்விபெற நேரிடும். எனவே மறைமுக தேர்தலை கொண்டு வந்து தப்பித்துக்கொள்ளாம் என கணக்கு போட்டு அதிமுக இது குறித்து பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
மறைமுக தேர்தல் என்றால் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அவர்களை வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார். இவ்வாரு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதால் ஆளும் கட்சிக்கு என்ன லாபம் என்றால் மேயர் பதவி முழுக்க கட்சியின் கட்டுபாட்டிற்குள் சென்றுவிடும் என்பதுதான். 
 
ஆனால், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.