எல்லா எம்.எல்.ஏக்களும் 6ம் தேதி ஆஜராகனும்; அதிமுக உத்தரவு! – வாக்கெடுப்பு நடக்குமா?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இருவரையும் அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் மூலமாக முதல்வர் வேட்பாளரை வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.