வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2019 (18:28 IST)

திமுகவின் 21 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கமா? அதிமுகவின் அடுத்த அஸ்திரம்

22 தொகுதி இடைத்தேர்தலின் முடிவு அதிமுகவுக்கு பாதகமாக வந்தாலும் அரசை காப்பாற்ற அதிமுகவிடம் திட்டம் இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேர்களை தகுதி நீக்கம் செய்தால் ஆட்சியை ஓரளவு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் திமுகவின் 21 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ய அதிமுக திட்டமிடுவதாக கூறப்படுகிறது
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் சட்டமன்றத்தில் திடீரென குட்கா பொட்டலங்களைச் எடுத்துக்காட்டி அதிர்ச்சி அடைய செய்தனர். இதனையடுத்து சபாநாயகர் தனபால், எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக் குழுவுக்கு பரிந்துரை செய்தார். இந்த உரிமைக்குழுவின் நடவடிக்கைக்கு திமுக, நீதிமன்றம் சென்று தடை வாங்கியுள்ளது. 
 
இந்த நிலையில் இந்த தடையை உடைக்க சட்டரீதியிலான முயற்சியில் அதிமுக இறங்கியுள்ளதாம். இந்த தடை நீங்கிவிட்டால் உரிமைக்குழு 21 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் திமுக நீதிமன்றத்திற்கு கட்டாயம் செல்லும். அந்த வழக்கு முடிவடைய ஒரு வருடமோ, இரண்டு வருடமோ ஆகும். அதற்குள் 2021 சட்டமன்ற தேர்தலே வந்துவிடும் என்பதுதான் அதிமுகவின் அஸ்திரமாக கருதப்படுகிறது