ரூ. 2 கோடி மோசடி: அதிமுக பிரமுகர் மகன் கைது!
ரூ. 2 கோடி மோசடி: அதிமுக பிரமுகர் மகன் கைது!
ரூபாய் 2 கோடி மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவின் ஊழல்கள் குறித்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஈரோடு காய்கறி வியாபாரிகளிடம் ரூ.2.2 கோடி மோசடி செய்ததாக அதிமுக பிரமுகர் மகன் வினோத்குமார் என்பவர் கைது செய்யபட்டுள்ளார்
வீட்டு மனைகள் வாங்கி தருவதாக கூறி வியாபார்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர்களிடம் ரூபாய் 2 கோடிக்கும் அதிகமாக பணம் வசூல் செய்ததாகவும் இதை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.