1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (19:12 IST)

யார் அந்த அதிமுக வேட்பாளர்? நாளை கூடும் ஆட்சிக்குழு

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் திருவாரூர் காலியான தொகுதி என அறிவிக்கப்பட்டு, இந்த தொகுதியின் இடைத்தேர்தல் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று துவங்கியது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் கட்டாய வெற்றி வேண்டும் என உறுதியாய் உள்ளனர். 
 
இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற கட்சி தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கும்படி அதிமுக, அறிவித்திருந்தது போல நேற்றும், இன்றும் ஆர்வமுள்ள பலர் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தனர். 
 
திருவாரூர் தொகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் ஆகியோர் இதில் அடக்கம். இதனிடையே ராயப்பேட்டையில் நாளை மாலை அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் கூறித்தும் வேட்பாளர்கள் பரிசீலனையும் நடைபெறும் என தெரிகிறது. அநேகமாக நாளை திருவாரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் யார் என்ற தகவல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.