செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (15:35 IST)

திருவாரூரில் ஸ்டாலின்; கொளத்தூரில் உதயநிதி: இது என்ன புது ஸ்கெட்ச்சு...

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் திருவாரூர் காலியான தொகுதி என அறிவிக்கப்பட்டு, இந்த தொகுதியின் இடைத்தேர்தல் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
மேலும், உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அவர் ரசிகர் மன்றத்தினரும் விருப்பமனு வழங்கியுள்ளனர். இதற்கு மத்தியில் இடைத்தேர்தல் தேதி அறிவித்தது முதலே ஸ்டாலின் இந்த தொகுதியில் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகி வந்தது. 
அதற்கு ஏற்றார் போல் இந்த விருப்பமனு தாக்கலும் உள்ளது. அப்படியே இந்த தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டாலும் அவருக்கு வெற்றி நிச்சயம். அபப்டி அவர் வெர்றி பெரும் பட்சத்தில் கொளத்தூர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து அந்த தொகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என செய்திகள் தீயாய் பரவி வருகிறது. 
 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் நான் போட்டியிட வாய்ப்புமில்லை விருப்பமும் இல்லை என கூறி பொய்யான தகவல்களை தெளிவுபடுத்தி உள்ளார்.