செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (14:56 IST)

ஒரே போன் கால்... அமமுகவை பகசிக்காம கிளம்பிய அதிமுக வேட்பாளர்

ராசிபுரத்தில் அமமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து மறுவாக்கு எண்ணிக்கை கோரிய அதிமுக வேட்பாளர் ஒரு போன் காலால் மனம் மாறி திரும்பி சென்றுள்ளார். 
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.    
 
தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது. இதனிடையே அமமுகவும் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 95 இடங்களை கைப்பற்றியுள்ளது. 
 
இந்நிலையில், ராசிபுரத்ம் ஒன்றியத்தில் மொத்தம் 9 வார்டுகள் அடங்கியுள்ளன. இதில், 2வது வார்டில் 18 வாக்கு வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் அதிமுக வேட்பளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுக வேட்பாளர் மறுவாக்கு எண்ணிக்கையை கோரினார். 
 
மறுவாக்கு எண்ணிக்கைகான படிவத்தை பூர்த்தி செய்து தரும்படி வக்கு எண்ணிக்கை அதிகாரி ஒருவர் கோர, அதற்குள் அதிமுக வேட்பாளருக்கு போன் கால் வந்து பின்னர் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டாம் என கூறி தோல்வியை ஒப்புக்கொண்டு நகர்ந்தார். 
 
அந்த போன் கால் என்னவாக இருக்கும் என தெரியாத நிலையில் அதிமுக வேட்பாளரின் மன மாற்றத்தால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்தது.