திருவாரூர் தேர்தல்: திடீரென பின்வாங்கும் அதிமுக

Last Modified ஞாயிறு, 6 ஜனவரி 2019 (21:46 IST)
திருவாரூர் தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தலை சந்திக்கும் தைரியத்தில் இல்லை என்பதே அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. தினகரனின் அமமுக மட்டுமே இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது.
திமுக வேட்பாளரை அறிவித்திருந்தாலும் கஜா புயல் நிவாரணம் என்ற காரணத்தை காட்டி தேர்தலை ரத்து செய்யவே குரல் கொடுத்து வருகிறது. அதிமுக இன்னும் வேட்பாளரையே அறிவிக்கவில்லை. மற்ற கட்சிகள் இன்னும் போட்டியிடுவது குறித்த அறிவிப்பையே செய்யவில்லை

இந்த நிலையில் திருவாரூர் தேர்தல் குறித்து இன்று கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'ஊரோடு ஒத்துப்போகவெண்டும் என்று சொல்லுவார்கள். ஊரே திருவாரூரில் இப்போது நிவாரணப் பணிகள்தான் தேவை என்று நினைக்கிறது. இடைத்தேர்தல் இப்போது தேவையில்லை என்றே கருதுகிறது. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எல்லா கட்சியினரும் ஊர்மக்கள் போலவே விரும்புகிறார்கள். நாங்களும் தேர்தல் இப்போது தேவையில்லை என்றுதான் விரும்புகிறோம்' என்று கூறியுள்ளார்.


திருவாரூர் தேர்தலின் தோல்வி வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பதே அனைத்து கட்சிகளின் பயமாக தெரிவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :