வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:06 IST)

அழகர் திருவிழாவைவிட கோலாகலமாக நடந்தது அதிமுக மாநாடு: நடிகை விந்தியா

மதுரையில் நடக்கும் அழகர் திருவிழாவை விட கோலாகலமாக அதிமுக மாநாடு நடந்தது என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார். 
 
அதிமுக மாநாடு நேற்று பிரமாண்டமாக நடந்ததை அடுத்து இந்த மாநாடு குறித்து நடிகை விந்தியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதிமுக பலமான எதிர்கட்சியாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் தலைவராக இருந்து கொண்டு மக்களின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
 
எங்கள் எழுச்சியின் பலத்தை சாதனைகளை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தான் இந்த மாநாடு என்றும் யாரும் பயப்பட வேண்டாம் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் நல்லாட்சி தரும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மதுரையில் அழகர் திருவிழாவை விட சிறப்பாக மாநாடு நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva