வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (15:07 IST)

நடிகை ஜோதிகாவின் ’ராட்சசி’ படத்துக்கு தடை ?... பரபரப்பு தகவல்

வாலி படத்தில் ஒரு சிறு பாடலுக்கு அறிமுகமாகி, பின்னர் 90களில் தமிழக மக்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தவர்தான் சூர்யாவின் மனைவி மற்றும் நடிகையுமான  ஜோதிகா. இவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
இந்நிலையில் இயக்குநர் கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ராட்சசி . இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்கர்ஸ் சார்பில், எஸ்.ஆர். பிரபு என்பவர் தயாரிகிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் வரும் ஜீலை 5 ஆம் தேதி ரிலீசானது.
 
இந்நிலையில் இப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். படத்தின் நாயகி ஜோதிகாவும் தம் கருத்துக்களை தெரிவித்தார்.
 
அப்பொது அவர் கூறியதாவது : சூர்யா கார்த்திக் படங்களைத் தயாரிப்பவர்கள் தான் டிரீம் வாரியர்ஸ். ஆனால் நானாக அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு நன்றி . இயக்குநர் கவுதம் முற்றிலும் புதிய கோணத்தில் கதையை  சொல்லியிருக்கிறார்.இசையமைப்பாளர் சியன் ரோல்டன் பாடல்கள் சிறப்பாக உள்ளது. 
 
சாட்டை, பள்ளிக்கூடங்கள் போன்ற இன்னும் 100 படங்கள் இதே கருத்தில் வரவேண்டும். மேலும்ம், அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை.அப்படி இருக்க மாணவர்களால் எப்படி நீட் தேர்வு எழுத முடியும் என்று கேள்வி எழுப்பினார். இந்தப்படத்தில் பல முக்கிய கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.. என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. அதில் பள்ளி ஆசிரியர்களை கேவலப்படுத்தும் விதமாக ராட்சசி படம் எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் , வசனங்கலை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.