புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (06:44 IST)

திமுகவுக்கு 169 தொகுதிகள், அதிமுகவுக்கு எவ்வளவு? கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் ஒரு சில கருத்து கணிப்புகள் ஏற்கனவே திமுக தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி வந்தது 
 
அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு கருத்துக் கணிப்பில் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறி உள்ளது. ஏபிபி மற்றும் சி-வோட்டர் எடுத்த கருத்துக் கணிப்பின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளது
 
திமுக கூட்டணி 169 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு படுதோல்வி இருக்காது என்றும் அந்த கூட்டணி 53 முதல் 63 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இந்த கருத்துக் கணிப்பின்படி திமுகதான் அடுத்து ஆட்சியமைக்கும் என்றும் மு க ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது