1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (21:52 IST)

தேர்தல் சீட் கிடைக்காததால் அரசியலில் இருந்து விலகிய அதிமுக எம்.எல்.ஏ

தேர்தல் சீட் கிடைக்காததால் அரசியலில் இருந்து விலகிய அதிமுக எம்.எல்.ஏ
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவி சீட் வாங்குவதும், சுயேட்சையாக போட்டியிடுவதும் தான் பல அரசியல்வாதிகளின் வழக்கமாக இருந்து வருகிறது 
 
ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அரசியலிலிருந்து விலகிய பெண் எம்எல்ஏ ஒருவரின் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சத்யா பன்னீர்செல்வம்
 
இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை இதனை அடுத்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தனது கணவருடன் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அந்த பகுதியில் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது