வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (17:24 IST)

ஆடி அமாவாசை திருவிழா.. சதுரகிரி பக்தர்கள் மலைக்கு செல்லும் நேரம் குறைப்பு..!

sathuragiri
ஆடி அமாவாசை திருவிழாவுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான நேரம் கட்டுப்பாடு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினத்தில் மட்டும் அதிக பக்தர்கள் வருகை தரும் நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

மலைப்பாதையில் காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran