செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 செப்டம்பர் 2018 (09:11 IST)

நிச்சயதார்த்தத்தன்று சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மணமகன்

கோவையில் திருமண நிச்சயதார்த்தத்தன்று மணமகன் 4 வயது சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெற்றோர் தங்களது பிள்ளைகளை வெளியே அனுப்பவே பயப்படும் சூழல் உருவாகி வருகிறது.
 
கோவை வீரகேரளம் தென்றல் நகரை சேர்ந்த பெயிண்டரான மணிகண்டன் (26) என்பவனுக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
 
நிச்சயத்திற்கு சற்று நேரத்திற்கு முன்னர் மணிகண்டன் 4 வயது சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறினார். அதிர்ந்து போன பெற்றோர்கள் வடவள்ளி போலீசில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
 
இதனால் மணிகண்டனுக்கு நடைபெற இருந்த நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது. ஒரு பெண்ணின் வாழ்க்கையும் தப்பித்தது.