திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (16:03 IST)

கள்ளக்காதல் மோகம்: 5 வயது மகளை இரையாக்கிய தாய்

பிரிட்டனின் கள்ளக்காதல் மோகம் காரணமாக தனது 5 வயது மகளை கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாய்க்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலன் மீது கொண்ட தீராக்காதல் காரணமாக அவரை வீட்டிற்கு அழைத்து பாலியல் உறவுக்கொண்டுள்ளார். அந்த பெண்ணிற்கு கள்ளக்காதலன் மீது ஏற்பட்ட அதீத மோகத்தால், தனது 5 வயது மகளுக்கு போதை மருந்து கொடுத்து, கள்ளக்காதலனுக்கு இரையாக்கியுள்ளார். 
 
4 மாதங்களாக நீடித்து வரும் இந்த கொடூர சம்பவத்தை போலீஸார் வாட்ஸ் ஆப் மூலம் கண்டுபிடித்துள்ளனர். ஆம், மகளின் ஆபாச புகைப்படங்களை எடுத்து வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
 
இந்நிலையில், அந்த பெண் மற்றும் அவரது காதலன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, அந்த பெண்ணுக்கு 22 ஆண்டுகளும், கள்ளக்காதலனுக்கு 25 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.