புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 நவம்பர் 2021 (07:50 IST)

வெள்ள பாதிப்பு கணக்கிடும் மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள விளைநிலங்கள் மற்றும் பொருட்கள் சேதமாகின 
இந்த நிலையில் தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய அரசின் சிறப்பு குழு இன்று சென்னை வருகிறது. இன்று சென்னை வரும் சிறப்பு குழு நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ளனர்
 
அதன்பின் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிலையில் அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் குழுவில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.