வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (20:15 IST)

சாதி குறித்த சர்ச்சைகளுக்கு சவுக்கடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழகத்தில் உள்ள ஜாதி கட்சியை சேர்ந்தவர்களும் சரி, ஜாதி வெறியர்களும் சரி அவர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, தாங்கள் ஆண்டாண்டு காலமாக அடிமையாக இருந்ததாகவும், தங்களை அடக்கி ஆண்டதாகவும் கூறுவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் அரசிடம் இருந்து இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பெற்ற பின்னரும் இன்னும் ஆயிரம் வருடத்திற்கு ஒதுக்கீடு வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், 'இன்னும் சாதி, மதம், என புலம்பிக்கொண்டே தாழ்வு மனப்பான்மையில் இருப்பது சரியல்ல. நீ முன்னேறுவதற்கு நீ என்ன செய்தாய்? என்பதை எண்ணிப்பார் என்று கூறியுள்ளர்.
 
மேலும் ஒரு மனிதன் முன்னேறா முதல் விஷயம் கல்வி. நன்கு படித்து நல்ல  நிலைக்கு வந்துவிட்டால் அதன்பின்னர் யாரும் ஜாதி, மதம் உள்ளிட்ட எந்த வேறுபாட்டையும் பார்க்க மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனின் உள்ளே ஒரு வெற்றியாளன் இருப்பான். அவனை தட்டியெழுப்பி மேலே கொண்டு வந்தால் நிச்சயம் முன்னேற்றம் இருக்கும். ஒருசிலருக்கு ஒருமாதமோ, சிலருக்கு ஒரு வருடமோ, அல்லது சிலருக்கு இருபது வருடமோ கூட ஆகலாம், அதுவரை புலம்புவதை விட்டு முயற்சி செய்ய வேண்டும்
 
இதற்கு நல்ல உதாரணம் இசைஞானி இளையராஜாதான். அவர் எங்கிருந்து வந்தார்? இன்று எந்த உயரத்தில் உள்ளார்? அவருடைய உழைப்பு, இசை அமைக்கும் திறன் தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது. எனக்கு அவர்தான் மனதளவில் வழிகாட்டி' என்று தெரிவித்துள்ளார். 
 
தாழ்த்தப்பட்ட ஜாதி என்று புலம்பி ஜாதி வெறியை தூண்டிவிடும் நபர்களின் மத்தியில் ஜாதிவெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பேட்டி பலரை கவர்ந்துள்ளது.