பட்ஜெட்டால் பங்கு சந்தையில் ஏற்றம் !..

Last Updated: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (12:20 IST)
இன்னும் சற்று நேரத்தில் இந்த ஆண்டுக்கான இடைககால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்படுகிறது.

2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனை இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்யவுள்ளார். இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வர இருப்ப்தால் இந்த பட்ஜெட் தாக்கல் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. 

இந்த பட்ஜெட் தாக்கலில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்துதல், விவசாயக் கடன் தள்ளுபடி முதலிய முக்கியமான அம்சங்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேப் போல முத்தலாக் போன்ற சர்ச்சையான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அது போன்ற மசோதாக்களால் சர்ச்சை உருவாகி நாடாளுமன்ற முடக்கம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இது இடைக்கால பட்ஜெட் மட்டுமே. தேர்தல் நடந்து ஆட்சிக்கு வரும் கட்சியே முழு ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யமுடியும்.

piyush

இந்நிலையில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. இன்று காலையில் இருந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 422 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 10869 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :