வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (07:18 IST)

சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்: தமிழிசை அதிரடி முடிவு

பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சியே ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கிவிட்டன.

சமீபத்தில் இந்தியா வந்திருந்த ராஜபக்சே கூறிய கருத்துக்காக காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆளும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நாளை சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தமிழக தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை தனது டுவிட்டரில் கூறியதாவது: தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் உணர்வையும், உணவையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு குறைத்து பேசி தென்னாட்டை இகழ்ந்து தமிழ்நாட்டை அவமதித்த காங்கிரஸ் அமைச்சர் சித்துவை கண்டித்து நாளை காலை 10:00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்' என்று கூறியுள்ளார்.

பஞ்சாபை சேர்ந்த ஒரு அமைச்சரின் கருத்துக்கு தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பதிலாக பஞ்சாபுக்கே சென்று ஆர்ப்பாட்டம் செய்யலாமே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.