திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (23:09 IST)

மனிதாபிமான காவல்துறை அதிகாரி: குவியும் வாழ்த்துக்கள்

காவல்துறை அதிகாரிகள் என்றாலே மக்களுக்கு ஒருவித பயம் இருக்கும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி செய்த ஒரு உதவி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது

பஞ்சாபில் உள்ள ஒரு பிசியான சாலையை கடக்க ஒரு வயதான மாற்றுத்திறனாளி முதியவர் பல நிமிடங்களாக முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் கடக்க முடியவில்லை. அவருக்கு ஒருசிலர் உதவ நினைத்தாலும் அவருடைய உடை அழுக்காக இருந்ததை கண்டு ஒதுங்கி சென்றனர்.

இந்த நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர் எந்தவித அருவருப்பும் இன்றி அந்த முதியவரை தூக்கி சாலையின் அந்த பக்கம் கொண்டு சென்றார். இதுகுறித்த வீடியோ ஒன்று பலமணி நேரமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

காவல்துறை அதிகாரிகளுக்கு நெட்டிசன்களும், பொதுமக்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இதனை அறிந்த காவல்துறை மேலதிகாரிகளும், அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.