ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தேமுதிகவை சேர்த்ததால் அமமுகவில் இருந்து வெளியேறிய கட்சி!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி விறுவிறுப்பாக் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியும் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியும், சீமான் தலைமையிலான கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் தேமுதிக இணைந்தது என்பதும் அக்கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்த்ததால் இந்திய தேசிய லீக் கட்சி அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளது 
 
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த தேமுதிகவை கூட்டணியில் சேர்த்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சி வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது