வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 மார்ச் 2021 (14:46 IST)

உறுதியானது அமமுக-தேமுதிக கூட்டணி: இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு!

உறுதியானது அமமுக-தேமுதிக கூட்டணி
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு கட்சி தலைவர்கள் இடையே நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக பிரிந்து சென்றது
 
இந்த நிலையில் அமமுக மற்றும் தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அனைத்து தனித்து போட்டியிட தேமுதிக தயாராகி வந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது 
 
இந்தப் பேச்சுவார்த்தையில் தற்போது சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவருகின்றன
 
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், இன்று மாலை விஜயகாந்தை சந்திப்பார் என்றும் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது