செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (06:59 IST)

இந்தியா கூட்டணியில் இணைந்த அதிமுக.. புதுவையில் பரபரப்பு..!

சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையை கண்டித்து புதுச்சேரியில் இன்று பொதுமுடக்கம் செய்யப்படுவதாகவும், இந்தியா கூட்டணியுடன் அதிமுக இணைந்து இந்த போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுச்சேரியில் பந்த் போராட்டம் நடக்கிறது. மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் முடிவு. அதேபோல்  
சிறுமியின் கொலையை கண்டித்து அதிமுக சார்பில் இன்று பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி மற்றும் அதிமுகவின் இந்த அறிவிப்பு காரணமாக புதுச்சேரியில் இன்று பந்த் நடைபெறுகிறது. இதனால் இன்று புதுச்சேரியில் கடைகள் இயங்காது, பஸ்கள்,  ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிறுமி கொலையை கண்டித்து, வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், தாங்களாகவே  முன்வந்து பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva