வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனை அடுத்து புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதை அடுத்து நாளை காலை ஒடிசா மாநிலம் பூரி என்ற பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் தமிழகத்தில் உள்ள சில துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பாக சென்னை, தூத்துக்குடி, கடலூர், பாம்பன், நாகப்பட்டினம், காரைக்கால், எண்ணூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
Edited by Mahendran