ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 மே 2023 (07:48 IST)

தமிழகத்தில் 100க்குள் குறைந்தது கொரோனா பாதிப்பு.. பொதுமக்கள் நிம்மதி..!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கு மேல் இருந்த நிலையில் தற்போது அது 100க்குள் கட்டுக்குள் வந்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்தன. இதன் பயனாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 86 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் 13 பேருக்கும் கன்னியாகுமரியில் 6 பேருக்கும் வெளிநாட்டு பயணிகள் மூன்று பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 251 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 869 என்றும் கூறப்படுகிறது.

மேலும் கொரோனா தொற்றால் நேற்று கோவையில் ஒருவர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Edited by Siva