வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 மே 2023 (17:48 IST)

'தி கேரளா ஸ்டோரி 'படத் தயாரிப்பாளரை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் -முன்னாள் அமைச்சர் பேச்சால் சர்ச்சை

தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பாளரை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று மராட்டிய முன்னாள் அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

பாலிவுட்டில் தயாரான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த  மே 5  மாதம்  ஆம் தேதி  வெளியானது என்பதும் இந்த படம் தமிழ்நாடு கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அமைப்புகளால் எதிர்ப்பு ஏற்பட்டதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிடவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இன்னும் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது.

சமீபத்தில், பிரதமர் மோடி இத்திரைப்படத்திற்கு ஆதரவாகப் பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்தனனர்.

இந்த நிலையில்,  தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பாளரை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று மராட்டிய முன்னாள் அமைச்சர்  ஜிதேந்திர அவ்கத் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ‘’தி கேரளா ஸ்டோரி படக் குழுவினர், கேரளாவின் நன்மதிப்பை மட்டுமின்றி  கேரளா பெண்களையும் அவமதித்துள்ளனர்.  கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மாயமாகிவிட்டதாகவும், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  ஆனால்,உண்மையில்  3 பேர்தான் ஐஎஸ்ஐஎஸ் குழுவில் சேர்ந்துள்ளனர்.  இத்திரைப்படம் புனையப்பட்ட கதை. இத்திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.