அரசு மருத்துவர் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை: திருடனை பிடிக்க 3 தனிப்படைகள்
அரசு மருத்துவரின் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் என்ற பகுதியில் அரசு மருத்துவர் ஒருவரின் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களின் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன
மேலும் அரசு மருத்துவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அவர்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அரசு மருத்துவர் வீட்டில் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.