திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2022 (15:47 IST)

ஏழை-எளிய மக்களுக்காக ரூ.600 கோடி சொத்துகளை கொடுத்த மருத்துவர் !

aravi nd goyal
ஏழை எளிய மக்களுக்கு உதவுவற்காக ரூ.600 கோடி சொத்துக்களை அரசுக்கு வழங்கியுள்ளார் ஒரு மருத்துவர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மொரோதாபாத்தைச் சேர்ந்தவர்  மருத்துவர்  அரவிந்த் கோயல். இவர்  50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், ஏழை எளிய மக்களுக்கு உதவும்  நோக்கில் தனது ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை உத்தரபிரதேச மா நில அரசுக்கு கொடுத்துள்ளார் அவர்.

இவர் பல விருதுகள் பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு மகன் கள் மற்றும்  1 மகள் உள்ள போதிலும் இந்த முடிவை எடுத்துள்ளார் அரவிந்த் கோயல். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.