அத்திவரதர் தரிசனத்தில் மின்சாரம் தாக்கியது – பக்தர்கள் அதிர்ச்சி
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனத்தில் பக்தர்களை மின்சாரம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க பொது வரிசையும், விஐபிக்களுக்கான சிறப்பு வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று விஐபி வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதனால் சிலர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். மின்சாரத்தால் தாக்கப்பட்டவர்களில் போலீஸும், தீயணைப்பு துறையினரும் அடங்குவர். 20 பேர் மேல் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரிய அளவில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் பாதுகாப்பு வசதியை மேம்படுத்தி வருகிறது.